ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Captain Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தந்தையர் தின கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.
தந்தையர் தினம்தந்தையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. திரையுலக பிரபலங்கள் முதல் பலரும் தங்களின் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டார்கள். இந்நிலையில் தான் விஜயபிரபாகரனும், சண்முக பாண்டியனும் சேர்ந்து இந்த தந்தையர் தினத்தை அப்பா கேப்டன் விஜயகாந்துக்கு ஸ்பெஷலானதாக மாற்றியிருக்கிறார்கள்.
Fathers day: தந்தையர் தினம்: கோலிவுட்டின் கூல் அப்பாக்கள் ரஜினி, கமல், அஜித், விஜய்…லியோனிகுஷ்புவை கிண்டலடித்த லியோனிவிஜயகாந்த் மகன்கள்விஜய பிரபாகரனும், சண்முக பாண்டியனும் தந்தையர் தினத்தன்று தங்களின் அன்பு அப்பாவுக்கு பரிசு ஒன்றை கொடுத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். மகன்கள் தனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
கேப்டன் ட்வீட்ரசிகர்கள் வேதனைவிஜயகாந்த் மாஸ்க் அணிந்திருப்பதால் அவரின் முகம் தெரியவில்லை. மகன்கள் அளித்த பரிசை விஜயகாந்தால் பிடிக்க முடியவில்லை. அதனால் மகன்களும், மனைவி பிரேமலதாவும் அந்த பரிசை பிடிக்க உதவி செய்திருக்கிறார்கள். தந்தையர் தின கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மிஸ் யூ கேப்டன்ரசிகர்கள் கூறியிருப்பதாவது, இந்த புகைப்படங்களை பார்க்கும் போது மனது ஏதோ செய்கிறது. எப்படி இருந்த மனிதர் இப்படியாகிவிட்டார். சிங்கம் மாதிரி நடந்தவர் தற்போது நாற்காலியிலேயே இருக்கிறார். மிஸ் யூ கேப்டன். மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மாறி வாங்க. உங்களுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் பிறந்தநாள்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாளாகும். அன்று அவரை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையுடன் ரசிகர்களும், தேமுதிகவினரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலேயே இருக்கிறார் விஜயகாந்த். அவர் முகத்தை பார்த்துவிடும் ஆசையில் விஜயகாந்தின் வீடு இருக்கும் பகுதியில் ரசிகர்கள் உலாவி வருகிறார்கள்.
மகன்களுக்கு திருமணம்?விஜய் பேசக் கூடாதுனு சொல்லியும் அதை மேடையில் பேசிய மாணவியின் அப்பா: பத்த வச்சிட்டியே பரட்டைவிஜயகாந்தின் மகன்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும். விஜயகாந்த் வீட்டிற்கு மருமகள்கள் வர வேண்டும். தன் பேரப்பிள்ளைகளுடன் விஜயகாந்த் கொஞ்சி விளையாட வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். அண்ணி சீக்கிரம் ஒரு முடிவு எடுங்கள் என கேப்டன் ரசிகர்கள் பிரேமலதாவிடம் தெரிவித்துள்ளனர்.
ப்ளூ டிக் எங்கய்யா?அண்மையில் ட்விட்டரில் பலரின் ப்ளூ டிக்கை பறித்தார் எலான் மஸ்க். இங்க இருந்த ப்ளூ டிக்கை எங்கய்யா காணோம் என பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். ப்ளூ டிக்கை பறித்த வேகத்தில் அதை திருப்பிக் கொடுத்தார் மஸ்க். ஆனால் விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கில் இருந்து பறிக்கப்பட்ட ப்ளூ டிக் இன்னும் திரும்பி வரவில்லை. அது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Rajinikanth: அதிரடி முடிவு எடுத்த நடிகை கிரண்: அய்யய்யோ வேண்டாம்மானு பதறிய ரஜினி
தளபதி விஜய்தளபதி விஜய் அரசியலுக்கு வரும் ஐடியாவில் இருக்கிறார். இந்நிலையில் அவர் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். அதை பார்த்த ரசிகர்களோ, மற்றவர்களுக்கு கணக்கு பார்க்காமல் உதவி செய்த கேப்டன் அரசியலுக்கு வந்து இப்படியாகிவிட்டார். சூதானமாக இருங்க தளபதியாரே என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Vijay: 12 மணிநேரம் கால் கடுக்க நின்ற விஜய்: ஸ்மைல், கண்ணீர், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தளபதி