சென்னை: சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமான அஸ்வின்ஸ் திரைப்படத்தின் திகில் அனுபவம் குறித்து படக்குழுவினர் பிலிமிபீட்டுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் வசந்த் ரவி. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்.
முதல் படத்திலே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்படி ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார் வசந்த் ரவி.
அஸ்வின்ஸ்: நடிகர் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் அஸ்வின்ஸ். குறும்படங்களால் பிரபலமடைந்த இயக்குனர் தருண் தேஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவிருகும் அஸ்வின்ஸ் திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் அவர்களின் மகள் சரஸ்வதி மேனன், விமலா ராமன், முரளிதரன், சிம்ரன் பரிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மிரட்டலான கதை: அஸ்வின்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மிரட்டலான திரைக்கதையில் பக்கா திரில்லர் ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் அஸ்வின்ஸ் பட டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமானுஷ்ய சாபத்திற்கு பலியாகும் யூட்யூபர் குழுவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் அஸ்வின்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைப்பு இதுதான் காரணம்: இந்நிலையில் பிலிமிபீட் சேனலுக்கு அஸ்வின்ஸ் படக்குழுவினர் பேட்டி அளித்தனர். அதில்,அஸ்வின்ஸ் என தலைப்பு வைத்ததற்கான காரணத்தை நடிகர் வசந்த் ரவி விளக்கினார். இப்படத்தில் அஸ்வினி தேவர்கள் பற்றி ஒரு மித்தலாஜிகள் கனெக்ட் இருக்கிறது. அஸ்வினி தேவர்கள் ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு விஷயம், உண்மையில் ரிக் வேதத்தில் அஸ்வினி தேவர்கள் பற்றி இருக்கிறது. இதனால், அது சம்பந்தப்பட்ட சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் இது என்றார்.
இயக்குனர் தருண் தேஜா: இதைத் தொடர்ந்து பேசிய விமலா ராமன், இயக்குனர் தருண் தேஜா ஏற்கனவே இந்த படத்தி 20 நிமிட பைலட் திரைப்படமாக எடுத்துள்ளார். இதைப்பார்த்து விட்டு இந்த கதையை முழு நீள படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் தான் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன் என்றார். மேலும், இதுபோன்ற த்ரில்லர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். இத்திரைப்படத்தைல் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது.