கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்குமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்து நடாத்தும் நடமாடும் வைத்திய சேவையானது நாளை (21.06.2023) புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 12.30 மணிவரை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, பற் சிகிச்சை, வெளிநோயாளர் பிரிவு பொது வைத்திய சேவை, ஆயுர்வேத வைத்திய சேவை, ஆற்றுப்படுத்தல் உட்பட சமூக நல உதவித்தொகைகளுக்கான மருத்துவ சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளுதல், பொதுசன மாதாந்த உதவி கொடுப்பனவு, நோய் உதவி கொடுப்பனவு ( புற்றுநோய், சிறுநீரக நோய்), மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கல், முதியோர் – தேசிய அடையாள அட்டை இறப்பு பிறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள் என இவ்வாறு பல சேவைகள் அங்கு இடம்பெறவுள்ளன.
எனவே, பொது மக்கள் அனைவரும் இவ் இலவச சேவையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.