சென்னை: கேரள நடிகை வீடே கதி என்று இருந்த அந்த முன்னணி நடிகருக்கு ஸ்டார் நடிகர் வார்னிங் கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பால் போல தேகம் கொண்ட அந்த நடிகை சினிமாவில் அறிமுகமானதே விவகாரமான படம் என்பதால், அந்த நடிகை எது செய்தாலும் பூதக்கண்ணாடி வைத்து பார்த்து அதை சர்ச்சையாக்கி விடுவார்கள்.
அப்படி பல விவகாரத்தில் சிக்கி பட வாய்ப்பை இழந்துள்ளார்.
சர்ச்சை நடிகர் : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போன அந்த நடிகர். சினிமாவில் எவ்வளவு சீக்கிரமாக வளர்ந்து வந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைக்கு குறைவே இல்லாமல் சர்ச்சை நாயகனாக மாறினார். இவருடன் எந்த நடிகை சேர்ந்து நடித்தாலும், அந்த நடிகையின் பெயர் கிசுகிசுவில் அடிபட்டு டேமேஜ் ஆகிவிடும்.
பல சர்ச்சைகள்: காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நடிகர், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரிய பிரச்சனையாகி கடைசியில் இருவரும் திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டனர். விவாகரத்தாகிவிட்டது இனியாவது சர்ச்சையில் சிக்காமல் இருப்பார் என்று பார்த்தால் இப்போது அவரைப் பற்றிய சர்ச்சைகள் முடிந்தபாடில்லை.
விவாகரத்து: இவரின் விவாகரத்திற்கு காரணம் அந்த கேரளத்து நடிகை மீதான காதல் என்று செய்தி சோஷியல் மீடியாவில் காட்டுத்தீப்போல பரவியது. ஆனால் பிரிவுக்கு வேறு காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த செய்தி உண்மைதான் என சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். சினிமாவிற்கு வந்த வேகத்தில் இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான அந்த கேரள நடிகைக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க அழைப்பு விடுத்தார் அந்த சர்ச்சை நடிகர். இதனால்,கேரள நடிகையின் குடும்பத்தில் பிரச்சனை எழுந்து அது விவாகரத்தில் போய் முடிந்துவிட்டது.
வார்னிங் கொடுத்த நடிகர்: கேரள நடிகை கணவரை பிரிந்து விட்டதால், சர்ச்சை நடிகர் தனது வீட்டை மறந்துவிட்டு கேரள நடிகை வீடே கதி என்று கிடந்துள்ளார். இந்த விஷயம் ஸ்டார் நடிகருக்கு தெரியவர அவர், கேரள நடிகையை மிரட்டியதோடு மட்டுமில்லாமல், சர்ச்சை நடிகரை அழைத்து வார்னிங்கும் கொடுத்துள்ளார். விவாகரத்திற்கு பிறகு சினிமாவை மட்டுமே வாழ்க்கையாக நம்பி இருந்த கேரளத்து நடிகைக்கு தமிழ் சினிமாவில் எதிர்காலமே இல்லாமல் போய் தற்போது பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.