சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை விஞ்சிய ஜோ ரூட்! ஆஷஸ் தொடரில் சாதனை

பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் போட்டியின் 5-வது நாள் ஆட்டம் நடைபெறுமா என்று சந்தேகமாக இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் பாட் கம்மின்ஸின் ஆஸ்திரேலியா இடையேயான மோதல் கனமழையால் சிதைந்துவிடுவதற்கான வாய்ப்புகளை கனமழை சுட்டுக்காட்டுகிறது.

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை, ஏற்கனவே 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்துள்ளது. போட்டி மீண்டும் தொடங்கினாலும், மேகமூட்டமான சூழல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Looking at the conditions now, it does seem like there could be some delay to the start but we should still be good to get 4-5 hours of play. About 50 overs if rains does not play spoilsport. We should have a result.#Ashes2023 #Ashes23 #AUSvENG #ENGvsAUS

— Akshay (@CricHat) June 20, 2023

வானிலை எச்சரிக்கை

மழைப்பொழிவு 95 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. 97 சதவீத ஈரப்பதத்துடன் இன்று நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால், வானம் இருட்டாக காணப்படுகிறது. மழை நிற்கவில்லை என்றால் போட்டி டிராவில் முடியும். எனவே, இந்த முதல் போட்டியில் யாருக்கு வெற்றி என்பது, கிரிக்கெட்டை விட மழை தீர்மானிப்பதாகவே இருக்கும்.

ஆனால், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனது கிரிக்கெட் திறமையை நிரூபித்திருக்கிறார் ஜோ ரூட். ஆட்டத்தின் நான்காவது நாளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் ‘தனித்துவமான’ சாதனையை அவர் முறியடித்தார்.

ஆஷஸ் முதல் போட்டியில் ஜோ ரூட்டின் சாதனைகள்
30வது டெஸ்ட் சதம்
எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் தனது 30வது டெஸ்ட் சதத்தை அடித்தார். தற்போதைய பேட்டர்களில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே 31 சென்சுரி என்ற அதிக டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். 
 
ஜோ ரூட்
இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த பிறகு, தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ரூட், ஸ்டம்ப்டு ஆவதற்கு முன்பு 11,168 டெஸ்ட் ரன்களை எடுத்திருந்தார்.

விராட் கோலியின் சாதனை முறியடிப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு தொடக்கத்தில் நாதன் லயன் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆவதற்கு முன்பு டெஸ்டில் 8,195 ரன்கள் எடுத்திருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.