சென்னை மழையில் நனைந்தபடி வீடியோ வெளியிட்ட கவுதமி
1990களில் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், ராமராஜன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் தனது மகள் சுப்புலட்சுமி உடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் கவுதமி, இன்று காலை சென்னையில் பல இடங்களில் மழை கொட்டிய நிலையில் தனது வீட்டு அருகே மழையில் நனைந்தபடி ஒரு வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு இதைவிட சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்றும் அவர் கமெண்ட் கொடுத்துள்ளார்.