ஜூலை 4 ஆம் தேதி கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்

மேம்பட்ட வசதிகளை பெற்றதாக வரவிருக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி மாடல் ஜூலை 4, 2023 விற்பனைக்கு வெளியிடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. முந்நைய மாடலை விட கூடுதல் வசதிகள் மற்றும் சிறிய அளவிலான டிசைன் மேம்பாடுகளை பெற்றிருக்கும்.

சர்வதேச அளவில் விற்பனையில் கிடைக்கின்ற மாடலை போன்றே தோற்ற அமைப்பினை கொண்டு என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது. கூடுதலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற உள்ளது.

2023 கியா செல்டோஸ்

செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் புதுப்பிக்கப்பட்ட பம்ப்பர்கள், பெரிய கிரில் மற்றும் திருத்தப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில்-லேம்ப் ஆகியவற்றுடன்  சர்வதேச மாடலுக்கு இணையான வடிவமைப்பினை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்ட டேஷ்போர்டின் மேல் அமர்ந்திருக்கும் சிங்கிள் பீஸ் பைனாக்கிள் மூலம் உட்புறமும் பல்வேறு மாமாடுகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும்.. புதுப்பிக்கப்பட்ட மாடல் கேரன்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் மற்றும் வெர்னா போன்ற மாடல்களில் வழங்கப்படுகின்ற புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.