சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப் பெறக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தும் வகையில் ம.தி.மு.க. சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இன்று சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கையெழுத்து படிவத்தில் முதல் கையெழுத்திட்டுத் தொடங்கி […]