சென்னை: நடிகை அமலா பால் சினிமாவிற்குள் வந்தது குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் விரிவாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
இயக்குநர் ஏல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், திருமணத்திற்கு பின் திரைபடங்களில் நடிப்பதை நிறுத்தினார். பின் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார்.
சாதாரண குடும்பம்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செய்யாறு பாலு, அமலா பால் சினிமாவில் வந்தது குறித்து கூறியுள்ளார். அதில், தமிழ் சினிமாவிற்கு தமிழ்நாட்டு பெண்கள் நடிக்க வருவது மிகவும் குறைவு பெரும்பாலும் , கேரளா மும்பையில் இருந்து தான் வருவார்கள். அப்படி கேரள மாநிலம் அலுவா மாவட்டத்தில் இருந்து வந்தவர் தான் அமலா பால். அவர் ஒரு சாதாரண மிடில்கிளாஸ் பெண், அவருடைய அம்மா கான்ஸ்டெபிளாக இருந்தார். மாடலிங்கில் அமலா பாலுக்கு விருப்பம் இருந்ததால் விளம்பர படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.
வீரசேகரன்: அப்போது தான் தமிழில் ஆர்ட் டைரக்டர் வீரசம்மர் கதாநாயகனாக நடிக்கும் வீரசேகரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அமலா பாலை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது, ஓட்ட ஆட்டோவில் நொந்து நூடுல்ஸாகி வந்து அமலா பால் தனது அம்மாவுடன் வந்து இறங்குகிறார். வந்ததுமே என்னங்க பஸ் புக் பண்ணி இருக்கீங்க, கேரளாவில் இருந்து சென்னை வர 16 மணி நேரம் ஆச்சு என்று புலம்பினார்.
சர்ச்சை படம்: அந்த படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படம் சரியாக ஓடாததால், பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதன் பின் அமலா பாலுக்கு சிந்து சமவெளி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அந்த படத்தின் கதை விவகாரமான கதை என்பதால், அமலா பால் மறுத்துவிட்டார். ஆனால், இயக்குநர் அவரை சமாதானப்படுத்தி வற்புறுத்தி நடிக்க வைத்தார். இந்த படத்தை பற்றி பத்திரிக்கையில் படு மோசமான விமர்சனங்கள் வந்தாலும், அமலா பாலின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்
முன்னணி நடிகை: இந்த படத்திற்கு பிறகு தான் அமலா பாலின் வாழ்க்கையே மாறி தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்கிறார். முதல் படத்தில் ஆட்டோவில் வந்து இறங்கிய நடிகை அமலாபால், தனது திறமையாலும், அழகாலும் அடுத்த சில ஆண்டுகளில் விலை உயர்ந்த காரை வாங்கும் அளவுக்கு முன்னணி நடிகையானார். தலைவா படத்தில் யார் கதாநாயகி என்ற பேச்சு எழுந்த போது அமலா பால் பெயரை விஜய் பரிந்துரை செய்யும் அளவுக்கு மாறினார் இதுதான் சினிமா என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.