டில்லி உடனடியாக மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என 10 எதிர்க்கட்சிகள் கடிதம் அனுப்பி உள்ளன கடந்த மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மணிப்பூர் மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. இந்த கலவரம் சுமார் 50 நாட்களாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். தவிர ஆயிரக்கணக்கானோர் இன்னும் […]