சென்னை: மழை காரணமாக திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். நேற்று இந்த மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டையில் மழை பொழிவுக்கு இன்று வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.