ராம்சரண் – உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகனாக வாரிசு நடிகராக திரையுலகில் நுழைந்தவர் நடிகர் ராம்சரண். அதன்பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தில் நடித்ததன் மூலம் பட்டை தீட்டப்பட்ட ராம்சரண், இன்று தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் வரவேற்பை பெற்ற மிகப்பெரிய நடிகராக தன்னை செதுக்கி கொண்டுள்ளார்.. இவருக்கும் அப்போலோ குழுமத்தை சேர்ந்த உபாசனாவுக்கும் கடந்த 2012ம் வருடம் திருமணம் நடைபெற்றது.

ஒருவருக்கொருவர் புரிதல் கொண்ட தம்பதிகளாக இவர்கள் இணைபிரியாமல் வலம் வந்தாலும், கடந்த பத்து வருடங்களாக இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையே என இவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அவ்வப்போது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உபாசனா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான தகவலை தம்பதியினர் வெளியுலகுக்கு தெரியப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று பிரசவத்திற்காக ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் உபாசனா இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என ராம்சரண் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ராம்சரண் உபாசனா இருவருக்கும் திரை உலகில் இருந்தும் உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.