கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த கேசவன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன், செங்கல் சூளையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தளி அடுத்த கே.மல்ல சந்திரம் கிராமத்தின்அருகே பின்னால் காரில் வந்தவர் மோதியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கேசவனை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. கேசவனின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.