விசாகப்பட்டினம்,ஆந்திராவில், ஆசிரமத்தில் இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மடாதிபதியை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெங்கோஜி நகரில், ராமானந்தா ஞானானந்தா என்ற ஆசிரமத்தை, மடாதிபதி பரமானந்தா, 60, என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த ஆசிரமம், 1955 முதல் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த 14 வயதுடைய இரு சிறுமியரிடம், கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில், மடாதிபதி பரமானந்தா பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதில் ஒரு சிறுமி ஆசிரமத்தில் இருந்து தப்பித்து, விஜயவாடாவுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் உதவியுடன், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்ட சிறுமி, ஆசிரமத்தில் நடந்ததை கூறினார்.
இது குறித்து, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், ஆசிரமத்தில் இருந்த மடாதிபதி பரமானந்தாவை நேற்று கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement