Adipurush – ராமனும், அனுமனும் வீடியோ கேம் கதாபாத்திரமா?.. பிரதமரிடம் சென்ற ஆதிபுருஷ் பஞ்சாயத்து

சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் திரைப்பட தொழிலாளர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் படமான ஆதிபுருஷ் கடந்த 16ஆம் தேதி வெளியானது. சீதையாக கீர்த்தி சனோனி, ராவணனாக சைஃப் அலிகான் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக வெளியான ஆதிபுருஷுக்கு ரசிகர்களில் பெரும்பாலானோர் தங்களது நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்து படத்தின் கிராஃபிக்ஸை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

வசூ: ஒருபக்கம் கடுமையான விமர்சனங்களை படம் சந்தித்தாலும் மறுபக்கம் நல்ல வசூலை படம் ஈட்டிவருவதாக படக்குழு தொடர்ந்து தெரிவித்துவருகிறது. அதன்படி முதல் இரண்டு நாட்களில் 240 கோடிவரை வசூலித்ததாக கூறப்படும் ஆதிபுருஷ் இதுவரை 370 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. ஆனால் படத்தின் தோல்வியை மறைப்பதற்காக படக்குழு இப்படி போலியான தகவல்களை வெளியிட்டுவருவதாக ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

பிரச்னை: ஆதிபுருஷ் படத்துக்கு வசூல், விமர்சனம் தாண்டி மற்ற விஷயங்களிலும் பிரச்னை எழுந்துள்ளது. சீதை குறித்த வசனத்துக்கு எதிர்ப்பு நேபாளத்தில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் சில வசனங்களை மேற்கோள் காட்டி இந்தியாவிலும் படத்தை தடை செய்ய வேண்டும் என பலர் கூறிவருகின்றனர். நேற்றுக்கூட அயோத்தி ராம ஜென்ம பூமியின் தலைமை அர்ச்சகர்கூட இதே கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Film Workers Union has written a letter to Prime Minister Narendra Modi to ban Adipurush

கடிதம்: இந்நிலையில் படத்துக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதன்படி ஆதிபுருஷ்ஷை தடை செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தில், “ஆதிபுருஷ் திரைப்படத்துக்கு தடை விதிக்குமாறு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைக்கிறது. இப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் ராமரையும், அனுமனையும் அவமதிக்கும் வகையில் உள்ளன. மேலும் இந்துக்களின் மத நம்பிக்கையையும், சனாதன தர்மத்தையும் இப்படம் காயப்படுத்துகிறது.

வீடியோ கேம் கதாபாத்திரம்: ஸ்ரீராமர் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் கடவுளாக இருப்பவர். அது எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இப்படத்தில் ராமரையும், ராவணனையும் ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தை போல காட்டியுள்ளனர். இப்படத்தின் வசனங்களும் உலகம் முழுக்க வாழும் இந்தியர்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்துக்கு உடனடியாக தடை விதிக்கவும், எதிர்காலத்தில் இப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாத வகையில் தடுக்கவும் பிரதமர் நரேந்திரம் மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

இவர்கள் நடித்திருக்கக்கூடாது: படத்தின் இயக்குநர் ஓம் ராவத், வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர், தயாரிப்பாளர்கள் ஆகியோரின் மீது இந்துமத நம்பிக்கையை புண்படுத்தியதற்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்திய சினிமாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மோசமான ஒரு படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோனி, சைஃப் அலிகான் ஆகியோர் நடித்திருக்கக் கூடாது” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.