BSNL plans: 84 நாட்கள் வேலிடிட்டி உள்ள புதிய டேட்டா திட்டங்கள் அறிவிப்பு!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இன்றைய தினத்தில் இந்தியாவின் முன்னனி டெலிகாம் நிறுவனங்களாக Airtel, Jio, Vi போன்ற நிறுவனங்கள் இருந்தாலும் BSNL இன்னமும் சந்தையில் உள்ளது என்பதை அவ்வப்போது காட்டுகிறது. பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்களை நம்பியே உள்ள BSNL விரைவில் 4G மற்றும் 5G சேவையை வழங்கவுள்ளது.

தற்போது இருந்துகொண்டிருக்கும் BSNL வாடிக்கையாளர்களுக்காக நீண்ட நாள் திட்டமாக இரு திட்டங்களை அறிவித்துள்ளது. மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி இதில் நமக்கு கிடைக்கும். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Airtel 5G பயன்படுத்தி அன்லிமிடெட் டேட்டா, OTT திரைப்படங்களை காணலாம்!

769 ரூபாய் திட்டம்

இதில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 2GB வரை டேட்டா வசதி, ஒரு நாளைக்கு 100 SMS வசதி போன்றவை கிடைக்கும். இதனுடன் Value Added services என்று BSNL Tunes கிடைக்கும். மேலும் திரைப்படங்களை கண்டு ரசிக்க EROS Now சந்தா வசதியும் 8 நாட்களுக்கு கிடைக்கிறது. இது தவிர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இசையை கேட்டு ரசிக்க Lokdhun+Zing ஆப் வசதி உள்ளது.

599 ரூபாய் திட்டம்

இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 3GB டேட்டா கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100SMS வசதி, தனிப்பட்ட Ring Back Tone (RBT) வசதி, Astrotel, Gameon போன்ற சேவைகள் கிடைக்கின்றன.

Vi 365 Plans: ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் எந்த கவலையும் இல்லை!

இது ஒரு குறைந்த விலை திட்டம் என்பதால் Value Added services இதில் இடம்பெறவில்லை. BSNL நிறுவனம் 4G மற்றும் 5G சேவையை அறிமுகம் செய்ய TCS (Tata Consultancy Services) நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு வருவதற்குள் BSNL 5G சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.