ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பிரீமியம் சந்தையில் மிக தீவரமான செயல்பாட்டை மேற்கொள்ளும் நிலையில் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற எக்ஸ்ட்ரீம் 440R பைக்கினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ-ஹார்லி X440 பைக்கின் என்ஜின் அடிப்படையில் எக்ஸ்பல்ஸ் 440 மற்றும் எக்ஸ்ட்ரீம் 440R வரவுள்ளது. சமீபத்தில் 125சிசி பிரீமியம் மாடலும் சோதனை செய்து வரும் படங்களும் வெளியானது.
Hero Xtreme 440R
சில நாட்களுக்கு முன்பாக 4 வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டிருந்தது. அடுத்துப்படியாக ஒவ்வொரு காலாண்டிற்கும் புதிய பீரிமியம் பைக்குகளை வெளியிடுவோம் என ஹீரோ குறிப்பிட்டிருந்த நிலையில், அடுத்து இந்நிறுவனத்தின் முதல் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற மாடலாக கரீஸ்மா 210 XMR விற்பனைக்கு வெளியாக உள்ளது.
மேலும் கரீஸ்மா பைக்கின் அடிப்படையில் நேக்டூ ஸ்போர்டிவ் மாடல் ஆனது எக்ஸ்ட்ரீம் 210R என்ற பெயரில் வெளியாகலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் ஜூலை 3 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள எக்ஸ் 440 பைக்கின் என்ஜின் அடிப்படையில் அட்வென்ச்சர் ரக மாடல் ஒன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற எக்ஸ்ட்ரீம் 440ஆர் வெளியிட திட்டமிட்டுள்ளது. 440cc என்ஜின் பெற உள்ள பைக்குகள், அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
இந்த பிரீமியம் மாடல்கள் குறிப்பிட்ட டீலர்ஷிப்கள் மூலம் விற்கப்படும். அதற்காக, அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் 100 க்கும் மேற்பட்ட முன்னணி நகரங்களில் டீலர்களை துவக்க ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.