வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக தற்போது ஸ்டேட் வங்கியின் எம்.டி.,யாக இருக்கும் சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு, நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. அவர் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியில் துணை கவர்னராக இருக்கும் மகேஷ்குமார் ஜெயின் பதவிக்காலம் ஜூன் 22 அன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து காலியாகும் அந்த இடத்திற்கு சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
வங்கித்துறையில் சில்லறை மற்றும் கார்ப்பரேட் பேங்கிங், சர்வதேச பேங்கிங், டிரேட் பைனான்ஸ் டிஜிட்டல் பேங்கிங் மற்றும் பரிவர்த்தனை வங்கித்துறையில் அனுபவம் வாய்ந்த இவர், தற்போது எஸ்பிஐ வங்கியில் கார்ப்பரேட் பேங்கிங் துறையில் எம்.டி.,யாக பணியாற்றி வருகிறார்.
எஸ்பிஐயின் டிஜிட்டல் பேங்கிங் துறையில் தலைமையில், அந்த வங்கியின் டிஜிட்டல் பயணத்தின் ஒரு அங்கமாக சுவாமிநாதன் ஜானகிராமன் இருந்துள்ளார்.
எஸ்பிஐ வாரியத்தின் முழு நேர இயக்குநராக பதவி விகிக்கும் இவர், கார்ப்பரேட் வங்கி செயல்பாட்டை கண்காணித்து வருகிறார்.அதற்கு முன்னர், அவர் இந்த பதவியில் இருந்து, வங்கி உத்தரவாத செயல்பாடுகள், மேலாண்மை, ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். யெஸ் வங்கி , ஜியோ வங்கி, என்பிசிஎல், பூடான் வங்கி ஆகியவற்றில், எஸ்பிஐ-யின் நியமன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement