இந்திய சாலைகளில் தொடர்ந்து இயங்குகின்ற டிரக்குகளில் ஒட்டுநர்களின் பனி சமையை எளிமையாக்க குளிருட்டப்பட்ட கேபின் வசதியை ஏற்படுத்த வேண்டும் இதற்கான நடைமுறை 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இந்தியாவின் ஒட்டுநர் பற்றாக்குறை உள்ளதால் தொடர்ந்து 14 மணி நேரத்துக்கு மேல் பனி செய்கின்றனர். இந்தியாவில் லாரி டிரைவர்களுக்கு எவ்விதமான நேர கட்டுப்பாடும் இல்லை.
Indian Trucks AC Cabin
சர்வதேச பிராண்டுகள் ஸ்கேனியா, வால்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏசி கேபின் கொண்ட டிரக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தற்பொழுது வரை ஏசி கேபின் கொண்டு வருவதற்கு பெரிதாக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இந்நிலையில், இன்றைக்கு நிதின் கட்கரி அவர்கள் கூறுகையில், 43 முதல் 47 டிகிரி வெப்ப சூழலில் டிரக் ஓட்டுநர் வாகனத்தை இயக்குகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே ஏசி கேபின் அறிமுகப்படுத்த நினைத்தபோது, லாரியின் விலை உயரும் எனக் கூறி சிலர் எதிர்த்தனர்.
ஆனால், தற்பொழுது டிரக் ஓட்டுநர்களின் நலன் கருதி 2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து லாரிகளிலும் ஏசி கேபின் கட்டாயம் என்ற நடைமுறை கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
ஏசி கட்டாயம் நடைமுறைக்கு வரும் போது, புதிய லாரியின் விலை ரூ.10,000 முதல் 20,000 வரை உயரக்கூடும்.