ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீர், சென்னை என விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள், பட்ஜெட், பிரம்மாண்டமான திரைப்படம் என அனைத்தும் இருந்தாலும் எந்த வித அலட்டலும் இல்லாமல் அசால்டாக படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் லோகேஷ்.
இதன் காரணமாகவே அவர் தயாரிப்பாளர்கள் விரும்பக்கூடிய இயக்குனராக இருக்கின்றார் என கோலிவுட் வட்டாரம் அவரை பாராட்டி வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் லியோ படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றை படக்குழு பிரம்மாண்டமாக படமாக்கியதாம். கிட்டத்தட்ட 2000 நடனக்கலைஞர்களை வைத்து அப்பாடல் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
ரத்தான படப்பிடிப்பு
நா ரெடி என துவங்கும் அப்பாடல் செம குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விஜய்யுடன் அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலி கான் ஆகியோர் ஆடியுள்ளதாகவும் தெரிகின்றது. இதையடுத்து இப்பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வந்தது.
Vijay: மூன்றே நாட்களில் என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றினார் விஜய்..உருக்கமாக பேசிய பிரபல இயக்குனர்..!
சென்னையில் செட் அமைந்து லியோ கிளைமாக்ஸ் காட்சியை லோகேஷ் படமாக்கி வந்த நிலையில் தற்போது திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் சென்னையில் இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருவதால் படப்பிடிப்பை நடத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளதாம். இதன் காரணமாக படக்குழு அப்சட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மேலும் இதனால் படப்பிடிப்பை சொன்னபடி முடிக்கமுடியுமா என்ற கவலையும் லோகேஷிற்கு வந்துள்ளதாம். இந்நிலையில் இன்னும் பத்து நாட்களில் விஜய்யின் போர்ஷன் முடிய இருப்பதாகவும், இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்றும் தகவல்கள் வந்தன.
அப்சட்டில் படக்குழு
இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மழை பெய்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது படக்குழுவை அப்சட்டில் ஆழ்த்தியுள்ளது. எனவே மழை விரைவில் நின்று படப்பிடிப்பை மீண்டும் துவங்க ஆர்வமாக படக்குழு இருந்து வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் லியோ படத்தில் இருந்து நா ரெடி என்ற பாடலை வெளியிடுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் அப்பாடலுக்காக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.