Mar Selvaraj: கமல் முன்பாக 'தேவர் மகன்' படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ்.?: பரபரக்கும் இணையம்.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் ‘மாமன்னன்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில்
கமல்
முன்னிலையில் மேடையில் ‘தேவர் மகன்’ படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியுள்ளது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், விநியோகஸ்தராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் சினிமாவிலிருந்து விலகி தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கடைசி படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

வடிவேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ‘மாமன்னன்’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமல், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மாரி செல்வராஜ் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ‘தேவர் மகன்’ பார்த்த பிறகு உருவானது தான் ‘மாமன்னன்’. அந்தப்படத்தை பார்த்த போது ஏற்பட்ட வலி, பாசிட்டி, நெகட்டிவ், அதிர்வுகள் எல்லாமே சேர்ந்து என்னால் அந்த நாளை கடக்க முடியவில்லை. சினிமாவா பார்த்த ஒரு படம். ஒரு சமூகத்தை எப்படி புரட்டி போடுது. என்னாலம் பண்ணுது. பாசிட்டிவ், நெகட்டிவா எப்படி மாறுது. சரியா தப்பான்னு தெரியாம திணறிட்டு இருந்தேன்.

நடிகை கனகா குறித்து கங்கை அமரன் வேதனை..வீட்டிற்கு சென்றும் பார்க்க முடியவில்லை!

தேவர் மகன் திரைக்கதையில் ஒரு மாஸ்டர் ஸ்டாக். எல்லா இயக்குனர்களும் அந்தப்படத்தை பார்த்துட்டு படம் எடுப்பாங்க. நானும் கூட. தேவர் மகன் எனக்குள் மிகப்பெரிய மனப்பிறழ்வை ஏற்படுத்தியது. படத்தில் ரத்தமும், சதையுமா இருந்தது. இந்தப்படம் சரியா தப்பான்னு தெரியாம மனதில் அப்படி ஒரு வலி. தேவர் மகன் உலகத்துள்ள பெரிய தேவர் இருக்காரு. சின்னத்தேவர் இருக்காரு. இதுக்குள்ள எங்க அப்பா இருந்தா எப்படி இருப்பாருன்னு யோசிச்சு உருவான படம் தான் ‘மாமன்னன்’. என் அப்பாவுக்காக பண்ண படம்.

இதற்கு முன்பாக கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களை இயக்குவதற்கு முன்பாக தேவர் மகன் பார்த்தேன். ‘மாமன்னன்’ படம் பண்ணும் போதும் பார்த்தேன். தேவர் மகன் படத்தில் வடிவேலு சார் பண்ண இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னன்னா மாறுனா எப்படி இருக்கும் என்பது தான் ‘மாமன்னன்’ படம் என்று பேசியுள்ளார்.

Leo: கொளுத்தி போட்ட லோகேஷ் கனகராஜ்: வெறித்தனமான காத்திருப்பில் தளபதி ரசிகாஸ்.!

கமல் முன்னிலையிலே மாரி செல்வராஜ் ‘தேவர் மகன்’ படத்தை விமர்சித்து பேசியுள்ள இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனை வைத்து இணையத்தில் பல விவாதங்களும் கிளம்பி வருகிறது. இதனால் சோஷியல் மீடியாவே பரபரப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.