ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. விஜய்யுடன் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை மிகப்பிரம்மாண்டமாக படமாக்கினர். கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்களை வைத்து மிகப்பிரமாண்டமான முறையில் இப்பாடல் படமாக்கப்பட்டது. விஜய்யுடன் இப்பாடலில் மடோனா செபாஸ்டியன், அர்ஜுன், மன்சூர் அலி கான் ஆகியோரும் நடனமாடி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த ஒரு வாரம் இப்பாடல் படமாக்கப்பட்டதை அடுத்து தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடல் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இதன் ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Leo: திடீரென நிறுத்தப்பட்ட லியோ படப்பிடிப்பு..காரணம் என்ன தெரியுமா ?
நா ரெடி என துவங்கும் அப்பாடலை விஜய்யே பாடியுள்ளார். எனவே இந்த பாடலை பாடியது உங்கள் விஜய் என குறிப்பிட்டு இப்பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலின் பீட்டை கேட்கும்போதே செம குத்து பாடலாக இருக்கும் என்று தெரிகின்றது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலை போல இப்பாடலும் செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நா ரெடி தான் வரவா என துவங்கும் இப்பாடலின் வரிகளை கேட்ட ரசிகர்கள், விஜய் மறைமுகமாக ஏதோ சொல்கின்றார் என பேசி வருகின்றனர். அதாவது சமீபகாலமாக விஜய் அரசியலுக்கு வரவிருக்கின்றார் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதற்கு ரெடி என சொல்வதை போல நா ரெடி தான் வரவா என இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இவ்வாறு பல ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வரும் நிலையில் இப்பாடலின் வரிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகின்றது. கண்டிப்பாக இப்பாடலின் வரிகளின் மூலம் விஜய் ஏதேனும் ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துவார் என்றே எதிரிபார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.