ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Thalaivar: ரஜினிகாந்த் பயப்படுகிறார் என பேச்சு கிளம்பிய நிலையில் எங்கள் தலைவருக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார்கள் ரசிகர்கள்.
ஜெயிலர் நட்சத்திரங்கள்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அவர்களை எல்லாம் நடிக்க வைக்க நெல்சனுக்கு ஐடியா கொடுத்ததே ரஜினி தானாம். மல்டி ஸ்டாரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து ரஜினி அப்படி செய்திருக்கிறார்.பிரபுதேவாபுதுச்சேரியில் படப்பிடிப்பை தொடங்கிய பிரபு தேவாரஜினி அட்வைஸ்ஜெயிலரை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன், ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இனி சிங்கிள் ஹீரோக்கள் அல்ல மல்டி ஸ்டாரர்ரகளுக்கே வரவேற்பு. அதனால் என் படங்களில் கூடுதல் ஸ்டார்களை அதுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வையுங்கள் என இயக்குநர்களிடம் கூறி வருகிறார் ரஜினி என தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினி படத்தில் யஷ்தலைவர் 170 படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்தில் கே.ஜி.எஃப். படம் புகழ் யஷ்ஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இந்நிலையில் ரஜினிக்கு தனியாக நடிக்க பயம் வந்துவிட்டது. அதனால் தான் பிற ஹீரோக்களை தன் படங்களில் நடிக்க வைக்கிறார் என சமூக வலைதளங்களில் பேசத் துவங்கிவிட்டார்கள். அதை பார்த்த ரஜினி ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர்.
ரசிகர்கள் ஆதரவுபிற பிரபல நடிகர்களை தன் படத்தில் நடிக்க வைக்க தைரியம் வேண்டும். மற்ற பிரபலங்கள் நடித்தால் நமக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என்றே பிற நடிகர்கள் பயப்படுவார்கள். ஆனால் தலைவருக்கு அந்த பயமே இல்லை. அதனால் தான் தைரியமாக பிற பிரபலங்களை தன் படங்களில் நடிக்க வைக்க பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார். இதை போய் பயம்னு சொல்வதை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினி கணக்குAdipurush: ஆதிபுருஷை கிழி கிழினு கிழிச்ச சக்திமான்: ராமாயணத்தை அவமதிச்சுட்டாங்கனு கொந்தளிப்புதமிழ்நாடு மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களிலும் ரஜினிகாந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் பிற மாநில நடிகர்களை நடிக்க வைத்தால் அம்மாநில ரசிகர்கள் கூடுதலாக சந்தோஷப்படுவார்கள் என்பதே ரஜினியின் கணக்காம். ஜெயிலரில் மோகன்லால் நடித்திருப்பதால் கேரளாவில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவராஜ்குமார் நடித்திருப்பதால் கர்நாடக ரசிகர்களும் ஜெயிலரை பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கவுரத் தோற்றத்தில் ரஜினிRajinikanth: மிரள வைத்த ரஜினி: ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்கும் தலைவர் ரசிகர்கள்ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்திலும் நடித்து வருகிறார். தன் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக கவுரவத் தோற்றத்தில் வருகிறார். படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். முன்னதாக மும்பையில் நடந்த படப்பிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ் கலந்து கொண்டு நடித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.