Renault Rafale – ரெனால்ட் ரஃபேல் கூபே எஸ்யூவி அறிமுகமானது

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் ரெனால்ட் ரஃபேல் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக ஆடம்பரமான வசதிகளை பெற்ற ரபேல் காரின் இந்திய வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

ஐரோப்பாவில் முதலில் விற்பனைக்கு செல்ல உள்ள ரஃபேல் ஹைபிரிட் கூபே ரக எஸ்யூவி மாடலில் 194hp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் உள்ளது. கூடுதலாக 290hp மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

Renault Rafale SUV

ரஃபேல் எஸ்யூவி மாடல் CMF-CD பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கபட்ட ஆஸ்டரல் மற்றும் எஸ்கேப் உடன் பகிர்ந்து கொள்கிறது. மிகவும் தனித்துவமான பாடி பேனல்களுடன் தோற்றத்தைக் கொண்டுள்ளது. 4.71 மீ நீளம், 1.86 மீ அகலம் மற்றும் 1.61 மீ  உயரம் கொண்டுள்ள காரில் 2.74 மீ வீல்பேஸ் கொண்ட D-SUV பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

renault rafale suv side view

முதலில் வரவுள்ள 129hp டர்போசார்ஜ் 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஒரு மின்சார மோட்டார், உயர் மின்னழுத்த ஸ்டார்டர்-ஜெனரேட்டர் மற்றும் 2 kWh லித்தியம்-அயன் பேட்டரி ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த பவர் 197 hp (147 kW / 200 PS) மற்றும் 205 Nm டார்க், ஸ்மார்ட் “மல்டிமோட் தானியங்கி கியர்பாக்ஸ் பெற்று முன்புற வீல் டிரைவ் பெற்றுள்ளது.

அடுத்து வரவுள்ள, 296 hp (221 kW / 300 PS) பவர் வெளிப்படுத்தும் “உயர் செயல்திறன் கொண்ட E-டெக் 4×4” பிளக் இன் ஹைப்ரிட்  ரியர் வீல் டிரைவில் கூடுதல் மின்சார மோட்டார் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. ஆல்-வீல் டிரைவை செயல்படுத்துகிறது. PHEV அமைப்பின் விரிவான விவரக்குறிப்புகள் வழங்கப்படவில்லை. இந்த மாடல் மிகப் பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கலாம். இதன் மூலம் 48-64கிமீ வரையிலான EV மட்டும் பயன்படுத்தி இயக்கலாம்.

2024 Renautl Rafale interior Rafale suv reanult Rafale seats reanult Rafale rear

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.