Salaar: ஆதிபுருஷ் சர்ச்சையில் இருந்து கிரேட் எஸ்கேப்.. சலார் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ்!

ஹைதராபாத்: பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்துக்கு எதிராக கிளம்பியுள்ள சர்ச்சையில் இருந்து எஸ்கேப் ஆக நடிகர் பிரபாஸ் தனது அடுத்த பட ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.

கேஜிஎஃப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு வெளியாகிறது.

தொடர்ந்து 3 ஃபிளாப் படங்களை கொடுத்த பிரபாஸ் சலார் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பட்ஜெட்டை விட வசூல் கம்மி: பாகுபலி படம் இமாலய வெற்றி பெற்றதும் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆனார். உடனடியாக பாலிவுட்டில் சாஹோ படத்தை பண்ண பிரபாஸுக்கு அந்த படம் ஹிட் கொடுக்கவில்லை.

அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளியானது. ஆனால், பட்ஜெட்டை விட வசூல் குறைவு என்பதால் ஒட்டுமொத்த படக்குழுவும் அப்செட் ஆனது.

600 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் இதுவரை 375 கோடி வசூல் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ஆதிபுருஷ் 500 கோடி வசூலை தாண்டுவதே பெரிய விஷயம் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஹாட்ரிக் ஃபிளாப்: பான் இந்தியா ஸ்டார் ஆன பிரபாஸ் அடுத்தடுத்து 200 கோடி, 300 கோடி, 600 கோடி பட்ஜெட் படங்களில் நடித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், எந்த படமும் ஓடவில்லை.

ரசிகர்களையும் கவராத படங்களை கொடுத்து ஹாட்ரிக் ஃபிளாப் கொடுத்து வரும் பிரபாஸ் இயக்குநர் பிரசாந்த் நீல் படத்தின் மூலம் சரியான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 நாட்களில் சலார்: ஆதிபுருஷ் திரைப்படம் நாடு முழுவதும் ட்ரோல்களை தாண்டி பஞ்சாயத்துக்களை கிளப்பி உள்ளது. படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருப்பதாக கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வரை கடிதம் பறந்துள்ளது.

இந்நிலையில், அந்த சிக்கலில் இருந்து பிரபாஸை காப்பாற்ற சலார் டீம் இன்னும் 100 நாட்களில் சலார் படம் வெளியாகப் போகிறது என்கிற அடுத்த பட அப்டேட்டை கொடுத்துள்ளனர். வரும் செப்டம்பர் 28ம் தேதி சலார் படம் வெளியாக உள்ளது.

சலார் வியாபாரம் ஆகுமா?: ஆதிபுருஷ் படத்தால் பெரும் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் சலார் படத்தை எந்த நம்பிக்கையுடன் வாங்குவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், பிரபாஸின் சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களுக்கு பிசினஸ் ரீதியாக பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் கூறுகின்றனர். பாலிவுட்டில் பிரபாஸின் மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில், வெறும் டோலிவுட் வசூலை மட்டுமே டார்கெட் செய்து அந்த படங்கள் வெளியானால் எதிர்பார்த்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெறுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

சலார் படத்தில் பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர். கேரளாவில் பிரித்விராஜ் நடிப்பதால் படம் பிசினஸ் ஆகும் என்கின்றனர். பாலிவுட்டில் படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்ல வெயிட்டான கேமியோ ஒன்றையும் இறக்க பிரசாந்த் நீல் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.