Sanjay Dutt: ஆத்தி, 308 பெண்களுடன் உறவு கொண்டாரா லியோ வில்லன் சஞ்சய் தத்: வியக்கும் ரசிகர்கள்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Leo villain Sanjay Dutt’s complicated life: லியோ பட வில்லனான சஞ்சய் தத் பெண்கள் விஷயத்தில் எப்படி என பிரபல இயக்குநர் தெரிவித்தது பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

​லியோ பட வில்லன்​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். அவர் தான் படத்தின் முக்கிய வில்லன் என்று கூறப்படுகிறது. ஆனால் கேங்ஸ்டரான சஞ்சய் தத் விஜய்யின் அப்பாவாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் சஞ்சய் தத் பெண்கள் விஷயத்தில் எப்படி என்று ரசிகர்கள் பேசுகிறார்கள். அதற்கு காரணம் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.

​கல்வி விருது விழாவில் முத்த மழையில் நனைந்த விஜய்சரத்குமார்​”எல்லாருமே அரசியலுக்கு வரணும்” சரத்குமார் பேட்டி!​​சஞ்சய் தத் பயோபிக்​சஞ்சய் தத்தின் வாழ்க்கையை சஞ்சு என்கிற பெயரில் படமாக எடுத்தார் ராஜ்குமார் ஹிரானி. அதில் சஞ்சய் தத்தாக ரன்பிர் கபூர் நடித்திருந்தார். பெரிய ஸ்டாரின் மகனான சஞ்சய் தத் ஒரு கட்டத்தில் கையேந்தி பிச்சை எடுத்திருக்கிறார். அதே சமயம் பெண்கள் விஷயத்தில் சஞ்சய் தத் வீக்கானவர் என்று படத்தில் காட்டியிருந்தார் ராஜ்குமார் ஹிரானி. 308 பெண்களுடன் உறவு கொண்டார் சஞ்சய் தத் என படத்தில் தெரிவித்தார் ராஜ்குமார் ஹிரானி.

​பெண்கள் விஷயத்தில்…​பேட்டியில் ராஜ்குமார் ஹிரானி கூறியதாவது, சஞ்சய் தத் பல பெண்களுடன் பழகியிருக்கிறார். யாரோ ஒருவரின் கல்லறையை தன் அம்மாவின் கல்லறை என தான் டேட் செய்யும் பெண்களிடம் சொல்வார். நீ என் அம்மாவை சந்திக்க வேண்டும் என அழைத்து வந்தேன் என்பார். அதன் பிறகு அந்த பெண்ணுக்கு சஞ்சய் தத் மீது பாசம் வந்துவிடும். உண்மையில் அந்த கல்லறை சஞ்சய் அம்மாவின் கல்லறையே இல்லை என்றார்.

​Ajith: நான் சிவாகிட்டயே போறேன்: மீண்டும் வெற்றிக் கூட்டணிக்கே திரும்பும் அஜித்

​கோபக்காரர் சஞ்சய்​சஞ்சய் தத் பற்றி ராஜ்குமார் ஹிரானி மேலும் கூறியதாவது, ஒரு பெண் சஞ்சய் தத்தை பிரிந்து சென்றுவிட்டார். உடனே சஞ்சய் தன் நண்பனின் புது காரை எடுத்துச் சென்று தன் முன்னாள் காதலியான அந்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே நின்ற கார் மீது மோதினார். அதன் பிறகே அவர் மோதியது முன்னாள் காதலியின் தற்போதைய காதலனின் கார் என்று தெரிய வந்தது. இரண்டு கார்களும் மோசமாக சேதமடைந்தன என்றார்.
​ரன்பிர் கபூர்​ரன்பிர் கபூர் கூறியதாவது, சஞ்சு சார் போன்று என் வாழ்க்கை பற்றி வெளியே சொல்ல தைரியம் இல்லை. ஆனால் என் கணக்கு மிகவும் குறைவு. 10 பெண்களுக்கும் குறைவாகத் தான் இருக்கிறது. அதனால் என் வாழ்க்கையை படமாக்க முடியாது என்றார். தான் 308 பெண்களுடன் உறவு கொண்டதாக படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரம் கூறியதை கேட்டு பலரும் வியந்தார்கள்.

​Vijay: விஜய் சொன்ன அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்: வெற்றிமாறன்

​லியோ ரசிகர்கள்​சஞ்சய் தத் தற்போது விஜய் படத்தில் நடித்து வருவதால் பழைய கதை குறித்து தற்போது பேசப்படுகிறது. மேலும் சஞ்சய் தத்தின் வாழ்க்கை அவ்வளவு பிரச்சனைகள் நிறைந்ததா என தமிழ் ரசிகர்கள் சஞ்சு படத்தை தேடிக் கண்டுபிடித்து பார்க்கிறார்கள். கே.ஜி.எஃப். 2 படத்தில் வில்லனாக மிரட்டிய சஞ்சய் தத் லியோவில் என்ன அட்டகாசம் எல்லாம் செய்திருக்கிறார் என தெரிவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.