வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த கேவியட் மனுவில், தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே அமலாக்கத்துறையின் மனு மீது முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
மனு
இதனிடையே, சென்னை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில், செந்தில்பாலாஜி உடல்நிலை சரியில்லாததால், அவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க இயலவில்லை எனக்கூறியுள்ளனர்.
ஆஜரில்லை
விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்ட வேண்டியுள்ளதால் வேறு நாளில் ஆஜராகிறேன் என அசோக் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜர் ஆகாத காரணத்தினால், மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement