ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் கவர்ச்சியாக உடை அணிந்தாலும் அதற்கும் ஒலி லிமிட் வைத்திருக்கிறார். படங்களிலும் படுநெருக்கமான காட்சிகளில் அவர் நடித்தது இல்லை.
“எல்லாருமே அரசியலுக்கு வரணும்” சரத்குமார் பேட்டி!
இந்நிலையில் ஜீ கர்தா இந்தி வெப்தொடரில் படுக்கையறை காட்சிகளில் தமன்னாவை பார்த்த தென்னிந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏன் தம்மு, இப்படி எல்லாம் நடிக்கிறீர்கள். தயவு செய்து படுக்கையறை காட்சியில் ஆபாசமாக நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் தெரிவித்தார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த காட்சிகளில் தமன்னா கொடுத்த ரியாக்ஷனை வைத்து மீம்ஸ் போட்டும் கலாய்த்தார்கள். இந்நிலையில் ஜீ கர்தாவில் நெருக்கமான காட்சிகளில் நடித்தது குறித்து தமன்னா பேசியிருக்கிறார்.
தமன்னா கூறியதாவது,
லாவண்யா மற்றும் ரிஷப் கதாபாத்திரத்தின் பயணத்தை விவரிக்க அந்த காட்சிகள் மிகவும் முக்கியம். ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த காட்சிகளை சும்மா வைக்கவில்லை.
ரிலேஷன்ஷிப் டிராமாவில் இது போன்ற நெருக்கமான காட்சிகள் எல்லாம் முக்கியமானவை ஆகும். மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அப்படித் தான் இருக்கும்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது சுஹைல் என்னை சவுகரியமாக உணரச் செய்தார். அந்த கதாபாத்திரமாக மாற எனக்கு பிரச்சனை இல்லை.
எங்கள் கதாபாத்திரங்களின் உறவு குறித்து நானும், சுஹைலும் நன்கு புரிந்து கொண்டோம் என்றார்.
சுஹைல் கூறியதாவது, முதல் நெருக்கமான காட்சியை ஷூட் செய்யும்போது நான் பதட்டமாக இருந்தேன். தமன்னாவும் என்னை சவுகரியமாக உணர வைத்தார் என்றார்.
தமன்னாவின் விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
நீங்கள் என்ன தான் விளக்கம் அளித்தாலும் ஏற்க முடியாது தம்மு. எங்க தம்மு எப்பவுமே க்யூட். அவர் இது போன்ற காட்சிகளில் இப்படி எல்லாம் ரியாக்ஷன் கொடுக்க மாட்டார். உங்களை காதலிக்கும் நடிகர் விஜய் வர்மாவுக்கு இது ஓகேவா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வரும் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலித்து வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே அவர்களிடையே காதல் என பேச்சாக இருந்தது. ஆனால் அதை இருவரும் கண்டுகொள்ளவில்லை.
Sanjay Dutt: ஆத்தி, 308 பெண்களுடன் உறவு கொண்டாரா லியோ வில்லன் சஞ்சய் தத்: வியக்கும் ரசிகர்கள்
இந்நிலையில் அண்மையில் தான் விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதி செய்தார் தமன்னா. அவர் என் உலகத்தை அழகாக புரிந்து கொண்டார். அதை மாற்றாமல் அப்படியே ஏற்றுக் கொண்டார் என்றார் தமன்னா.
முன்னதாக புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்றபோது விஜய் வர்மாவும், தமன்னாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே அதை கண்டுகொள்ளவில்லை.
என்ன விஜய், தமன்னாவை காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை. விஜய் வர்மாவை காதலிக்கிறீர்களா என தமன்னாவிடம் கேட்டதற்கு அவரும் பதில் சொல்லவில்லை. இப்படியே சென்ற நிலையில் தான் விஜய் வர்மாவை காதலிக்கிறேன் என கூறியிருக்கிறார் தமன்னா.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்தபோது தமன்னாவுக்கும், அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது.