ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். நடிகராக அறிமுகமாகி பின்பு இளைய தளபதியாக ரசிகர்களிடம் பிரபலமான விஜய் தற்போது தளபதியாக அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். விரைவில் தலைவராக அரசியலில் ஜொலிப்பார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பதாகவும் இருக்கின்றது.
விஜய் இந்தளவிற்கு திரைத்துறையில் உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவரின் உழைப்பும், திறனும் தான் முக்கிய காரணம். மேலும் அவர் தேர்ந்தெடுத்த படங்களும், இயக்குனர்களும் விஜய்யின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளனர்.
Lokesh kanagaraj: இந்த விஷயங்களுக்காக தளபதியுடன் மன்னிப்பு கேட்க நினைக்கின்றேன்..ஓப்பனாக பேசிய லோகேஷ்..!
பூவே உனக்காக படத்தின் மூலம் விஜய்க்கு முதல் வெற்றியை கொடுத்தார் விக்ரமன். மேலும் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் விஜய்யை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றார் பாசில். இதைப்போல விஜய்யின் திரைவாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குனர் அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ், அட்லீ, லோகேஷ், பேரரசு என விஜய் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு இயக்குனர்களும் அவரின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அவரை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றனர். இதில் மிக முக்கியமானவர் தான் இயக்குனர் ரமணா.
திருப்புமுனையை தந்த திருமலை
காதல் படங்களாக நடித்து வந்த விஜய்யை முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக திருமலை படத்தின் மூலம் மாற்றியவர் தான் ரமணா. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று விஜய்யை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் மாஸ் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் உருவாக்கியது. குறிப்பாக இப்படத்தில் விஜய் பேசிய வசனங்கள், அவரின் கெட்டப் மற்றும் ஸ்டைல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது.
இந்நிலையில் இவ்வாறு விஜய்க்கு திருப்புமுனையை அளித்த இயக்குனர் ரமணா சமீபத்தில் விஜய்யை பற்றி பேசியுள்ளார். அதாவது ,முதலில் திருமலை படத்தை நான் பிரபாஸை வைத்து தெலுங்கில் எடுக்கலாம் என நினைத்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் இந்த கதையை செதுக்கி தெலுங்கில் ஒரு இயக்குனராக ஆகிவிடலாம் என இருந்தேன்.
உருக்கமாக பேசிய ரமணா
ஆனால் அது ஒரு சில காரணங்களால் நடக்காமல் போனது. எனவே நொந்து போன நான் சென்னைக்கு திரும்பியதை அடுத்து என் நண்பர் ராதா மோகன் மூலமாக விஜய்க்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி சென்னைக்கு திரும்பிய மூன்றே நாட்களில் நான் இயக்குனரானேன். பல வருடங்களாக போராடி நொந்து போன என் வாழ்க்கையை மூன்றே நாட்களில் தளபதி மாற்றினார் என உருக்கமாக பேசியுள்ளார் இயக்குனர் ரமணா.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்