அண்மையில் நடிகர் விஜய் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதுக்குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் இந்த செயல்பாடு குறித்து தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்த கல்வி விருது விழா நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய். மேலும் மாணவர்கள் மத்தியில் பல விஷயங்களை பேசினார். அவரின் இந்த செயல் எதிர்கால நோக்கத்திற்கானது தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தயாரிப்பாளர் கே. ராஜன் விஜய்யின் இந்த செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, நடிகர் விஜய் தொகுதி வாரியாக மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கியுள்ளார். முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணிற்கு வைர நெக்லஸ் வழங்கியிருக்கிறார். இது மிகச்சிறப்பான விஷயம். இதில் ஒரு அரசியல் இருக்கிறதா? இல்லையா? என்றால் இருக்கிறது. ஏனென்றால் தொகுதி வாரியாக முதல் மதிப்பென்கள் பெற்ற மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த மாணவர்களின் பெற்றோர்களின் பேச்சு அந்தந்த தொகுதியில் பரவும். தொகுதி என்றாலே அரசியலாகிவிடும். அவர் பேசும் போது அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்க வேண்டும் என்றார். மிகப்பெரிய தலைவர்கள் அவர்களை மட்டுமல்லாமல் அண்ணாவை படிக்க வேண்டும். கலைஞரை படிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் படிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள சிறப்புகளை எல்லாம் சொல்ல வேண்டும்.
Simbu: சிம்பு உட்பட ஐந்து முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு.?: பரபரக்கும் திரையுலகம்.!
ஓட்டு போட உங்கள் அப்பா, அம்மாவிடம் பண வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளார். இதில் அரசியல் இல்லையா? நாளை நான் வந்தால் என்னிடம் ஓட்டு போட காசு வாங்க வேண்டாம் என்பதை மறைமுகமாக சொல்வதை போல் அது இருந்தது. இது எதிர்கால அரசியலுக்கான அடிதான். ஆனால் விஜய் இன்னும் பக்குவப்படவில்லை. நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி பற்றி சின்னதாக டையலாக் பேசினார். இதற்காக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இரவெல்லாம் அவரது வீட்டில் சோதனை நடந்தது.
அதற்கு பிறகு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கும். ஒரு படத்திலும் அரசியல் வசனம் கிடையாது. அன்னைக்கே அவர் ரசிகர்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். அவரிடம் போராட்ட குணம் இல்லை. அரசியலுக்கு வந்தால் அது அவசியம். இப்போ இருக்கும் ஆட்சிகள் எப்படி பழிவாங்குவார்கள். உள்ளே போடுவார்கள் என்று தெரியாது. நாளைக்கே தூக்கி உள்ள போட்டாங்கனா, ரெண்டு நாள் தாங்குவாரா? விஜய் தன்னை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் கே. ராஜன்.
Vijay: இத எப்ப சொல்ல போறீங்க.. விஜய்யை வம்பிழுத்த ப்ளூ சட்டை: கொந்தளித்த ரசிகர்கள்.!