குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மொத்தம் உள்ள 31-ல் 19 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டில் இதுவரை 523 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 5,842 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கி உள்ளது. குவாஹாட்டி, சில்சார் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளது.
இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.