புதுடெல்லி,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 12 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் அணியை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் நேற்று அறிவித்தது.
ரோகன் போபண்ணா தலைமையிலான இந்திய ஆண்கள் அணியில் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன், யுகி பாம்ப்ரி, சகெத் மைனெனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அங்கிதா ரெய்னா தலைமையிலான இந்திய பெண்கள் அணியில் கர்மன் கவுர் தண்டி, ருதுதாஜ் போஸ்லே, சஹஜா யாம்லாபாலி, வைதேகி சவுத்ரி, பிரார்த்தனா தோம்ப்ரே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
Related Tags :