சென்னை இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்ஹ்டு நீக்கக் கோரி அதிமுக போராட்டம் நடத்த உள்ளது. திமுக ஆட்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் அப்போது ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை செந்தில் பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளைப் பதிவு செய்து அனைத்தும் நிலுவையில் உள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. […]