கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த எட்டாம் தேதி இந்த கோயிலுக்குள் ஒரு சமூகத்தினரை அனுமதிக்க மறுத்ததால் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் முன்னிலையில் இருசமூகத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் குளித்தலை ஆர்டிஓ தலைமையில் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இதில் இருதரப்பினருக்கும் சுமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து இன்று மீண்டும் […]