ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஜெகநாதர் கோயிலில் நேற்று ரத யாத்திரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பகவான் ஜெகநாதர், அவரது சகோதரர் பாலபத்ரா, சகோதரி சுபத்ரா ஆகியோரது சிலைகள் ரதங்களில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ராஜ்கோட்டிலிருந்து நேற்று காலை புறப்பட்ட ரத யாத்திரை 26 கி.மீ தூரம் பயணம் செய்து மாலையில் மீண்டும் ஜெகநாதர் கோயிலை வந்தடைந்தது. வழியில் சுவாமி நாராயணன் கோயிலில் ரதம் நின்று சென்றது. இந்த ரத யாத்திரையை ஒரு புல்டோசர் வழிநடத்திச் சென்றது. அதன் முன் பகுதியில் ‘சனாதனி புல்டோசர்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது. சனாதன தர்மத்தை பாதுகாப்பதுதான் இந்த புல்டோசரின் நோக்கம் என ஜெகநாதர் கோயில் தலைமை பூசாரி மன்மோகன்தாஸ் தெரிவித்தார்.