நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து சந்தித்தார். அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மேலும் மாணவ மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்றும் கூறினார்.
விஜய்யின் செயல்பாடு மற்றும் பேச்சு அவரது அரசியல் வருகையின் முன்னோட்டம் என அரசியல் விமர்சகர்கைள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சினிமா மூலம் புகழ் கிடைத்தால் போதும் அரசியலுக்கு வந்துவிடலாம் சில நடிகர்கள் நினைத்து விடுகிறார்கள் என நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், கேரளாவில் நடிகர் மம்மூட்டி., கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் சினிமா புகழை பயன்படுத்த வில்லை என்றார். தமிழகத்தில் மட்டும்தான் மார்கெட்டை இழந்த நடிகர்கள் மக்களை கவர்ந்து முதல்வர் ஆகலாம் என பார்க்கிறார்கள், சினிமா புகழ் இருந்தால் போதும் முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள் என்றும் கூறினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்றும் மக்களுக்கு பணியாற்றி சிறைக்கு சென்றவர்களை ஓரங்கட்டிவிட்டு மக்களை ஹைஜாக் செய்து வாக்குகளை பெற்றுவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர் என்றும் திருமாவளவன் சாடினார். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் அவர் கூறினார்.
நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்பதாக கூறிய திருமாவளவன் விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா?என்று தெரியவில்லை என்றார். கருத்தியல் சார்ந்த களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம் என்றும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் வரவேற்கிறோம் என்றும் திருமாளவன் கூறினார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியலில் அடியெடுத்து வைப்பார் என கூறப்பட்டு வரும் நிலையில் திருமாவளவன் நடிகர்களின் அரசியல் வருகைக்கு எதிராக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்க்கு எதிராகதான் திருமாவளவன் பேசியுள்ளார் என விஜய்யின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.