வெலிங்டன்,
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பல விமான சேவைகளை வெகுவாக குறைத்துக்கொண்டன. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் முன்பு நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடரப்பட்டு வருகிறது.
அதன்படி நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷென்சென் விமான நிலையத்துக்கு இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த விமான சேவை தற்போது ஹைனன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் இயக்கப்படுகின்றது.
Related Tags :