பெங்களூரு நகருக்கு வந்த பெரிய சிக்கல்… முதலமைச்சர் சித்தராமையா என்ன செய்யப் போறார்?

கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று
காங்கிரஸ்
தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு கடந்த பாஜக ஆட்சியில் நடந்த 40 சதவீத ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதுதவிர அக்கட்சி சார்பில் அளிக்கப்பட்ட 5 பிரதான தேர்தல் வாக்குறுதிகளும் காரணமாக கூறுகின்றனர்.

கர்நாடகாவின் நிதி நிலை

இவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதுதவிர நிதி நிலையை சீராக வைத்திருப்பது அவசியம். இத்தகைய இக்கட்டான சூழலில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. பெங்களூரு மேம்பாட்டுத் துறை, நீர்வளத்துறை ஆகிய இரண்டு துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இந்த இரண்டு துறைகளும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வசம் இருக்கின்றன.

பெங்களூருவில் வேலை பாக்குறீங்களா? இதோ சூப்பர் நியூஸ் உங்களுக்காக…!

மாநில பட்ஜெட் தாக்கல்

விரைவில் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்குள் ஒரு தீர்வை எட்ட வேண்டிய நிலையில் கர்நாடகா அரசு இருக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சித்தராமையாவிற்கு தான் சிக்கல். ஏனெனில் இவர் வசம் தான் நிதித்துறை உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு துறைகளுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி, டி.கே.சிவக்குமார் உடனான அதிகார மோதலில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெங்களூரு மேம்பாடு

கடந்த பாஜக ஆட்சியின் போது பெங்களூருவில் பெய்த கனமழை எந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது என்பதை நாடே அதிர்ச்சியுடன் பார்த்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி டிராக்டர்களில் ஐடி ஊழியர்கள் அலுவலகம் சென்றனர். மழைநீரை வெளியேற்ற முடியாமல் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தவியாய் தவித்தது.

கேரளா மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனை..ரூ.10,000 கோடி ஹவாலா பணம்!

நீர்வளத்துறை

எனவே இந்நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேம்படுத்த வேண்டும். இதுதவிர நீர்வளத்துறையும் முக்கியமானது. காவிரி ஆற்றின் பிறப்பிடம் கர்நாடகா மாநிலத்தில் தான் இருக்கிறது. மேலும் அல்மட்டி, கிருஷ்ணராஜ சாகர், கபினி, துங்கபத்ரா, பத்ரா, ஹேமாவதி, பசவசாகர, சுபா எனப் பல்வேறு அணைகள் உள்ளன.

கரை சேர்க்குமா கர்நாடகா அரசு?

இவற்றின் மூலம் காவேரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரவதி, வராஹி, கபினி உள்ளிட்ட ஆறுகளின் நீரை திறம்பட பயன்படுத்த வேண்டும். இதற்கு போதிய நிதி ஆதாரம் தேவை. இதை கருத்தில் கொண்டு நிதித்துறையை கையாளும் சித்தராமையா நடவடிக்கை எடுப்பாரா? அதற்கு மத்திய அரசு கைகொடுக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.