பிராட்வே பிரகாசம் சாலையில் நாளை முதல் 45 நாட்களுக்கு போக் குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிராட்வே பிரகாசம் சாலையில், என் எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு முதல் தாதா முத்தியப்பன் தெரு சந்திப்பு வரையிலான பகுதி தற்காலிகமாக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி என்.எஸ்.சி போஸ் சாலையில் (பிராட்வே சந் திப்பு) இருந்து பிரகாசம் சாலை வழியாக ஸ்டான்லி […]