நீலகிரி: கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். நீலகிரி; அ.தி.மு.க சார்பில் ஊட்டியில் கனமழை பெய்தபோதும் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் தேனி; அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர் விடியாத அரசே ! விஷசாராய அரசே ! பத்து ரூபா பாலாஜியே பதவி விலகு ! என்ற வாசகத்துடன் தலையில் மண்பானையை சுமந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.திருநெல்வேலி; யோகா தினத்தையொட்டி மாவாட்ட நீதி மன்ற வாளகத்தில் நீதிபதிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டன்ர்.சென்னை; அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி,திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து, அ.தி.மு.க வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இராமநாதபுரம்; தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் அன்பழகன் தலைமையில் உறுப்பினர்கள் குழு வருகை தந்து மண்டபம் பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.மயிலாடுதுறை: திமுக முன்னாள் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி யினை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.ஈரோடு; சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையத்தில் ஓளிரும் ஈரோடு பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் 20 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை எரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டினைமாவட்ட கண்காணிப்பு அலுவலரும் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் பிரகாஷ் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.சென்னை;
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில் சர்வதேச யோகா தினதை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
புதுசேரி;யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள்தூத்துக்குடி; பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட வேண்டி 108 பேர் திருச்செந்தூரில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.வேலூர்:இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.கோவை;உலக யோகா தினத்தை முன்னிட்டு, மாநகர காவல்துறையினர் சுமார் 600 பேர், ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு யோகா பயிற்சியில் ஈடுப்பட்டனர்.