சென்னை கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் சாலை விபத்து மரணம் 19.70% குறைந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சாலை விபத்துகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனை அடைய, கடுமையான விதிகள் அமலாக்கம் மற்றும் முறையான போக்குவரத்து ஒழுங்குமுறை மூலம் முயல்கிறது. அமலாக்கம் மற்றும் ஒழுங்கு முறை தவிர, சாலைப் பயனாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. […]