வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தெகுசிகல்பா: மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் சிறையில் ஏற்பட்ட மோதலால், 41 பெண் சிறை கைதிகள் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. சிறையில் இரு தரப்பினருக்கு இடையே வன்முறை வெடித்தது. இதையடுத்து, பெண் கைதிகள் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், 41 பெண் சிறை கைதிகள் உயிரிழந்தனர்.
இது குறித்து, அந்நாட்டு பத்திரிகை கூறுகையில், சிறையில் குழுக்களாக பிரிந்து மோதி கொண்ட இந்த சம்பவத்தில் 41 கைதிகள் மரணம் அடைந்துள்ளதால், பிரச்னையை சரி செய்ய போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். விசாரணைக்கு பிறகு மோதல் ஏற்பட்டதற்கு காரணம் குறித்த தகவல்கள் தெரிய வரும்.
இதுபற்றி அந்நாட்டு பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஜூலிஸ்சா வில்லானுவா கூறும்போது, உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கிறது. வன்முறை குற்றங்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2019-ம் ஆண்டில் இதே போன்று ஆண்கள் சிறைகளில் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 கைதிகள் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement