H Vinoth: பெருசா ஆசை இல்ல, ரிடையர் ஆகும் ஹெச். வினோத்?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
H Vinoth retirement plan: லோகேஷ் கனகராஜ் மட்டும் அல்ல ஹெச். வினோத்தும் 10 படங்கள் இயக்கிய பிறகு ரிடையர் ஆகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

​ஹெச். வினோத்​சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஹெச். வினோத். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் வினோத். படம் பார்த்த அனைவரும் வினோத்தை பாராட்டினார்கள். வாவ், என்ன ஒரு படம். இந்த விஷயத்தை படமாக்க வேண்டும் என்று வேறு யாருக்கும் தோன்றவில்லையே என பாராட்டினார்கள்.பிரபுதேவா​புதுச்சேரியில் படப்பிடிப்பை தொடங்கிய பிரபு தேவா​​அஜித் படங்கள்​கார்த்தியை இயக்கிய கையோடு அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார் ஹெச். வினோத். அடுத்தும் அஜித் படத்தை வினோத் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்தது. இந்நிலையில் தான் ஹெச். வினோத் பற்றி ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

​ஓய்வு முடிவு​Prabhudeva: மகளுக்கு நயன்தாரானு பெயர் வைத்திருக்கிறாரா பிரபுதேவா?சமூக அக்கறை கொண்ட படங்களாக இயக்கி வருகிறார் ஹெச். வினோத். அவர் தொடர்ந்து பல படங்களை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரோ 10 படங்கள் இயக்கிவிட்டு ஓய்வு பெறுவது என்கிற முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 10 படங்களுடன் வினோத் ஓய்வு பெறவே கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​கமல் படம்​ஹெச். வினோத் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து கே.ஹெச். 233 படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்த பட ஸ்க்ரிப்ட்டில் சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருக்கிறாராம் கமல். அவர் சொன்னது போன்று ஸ்க்ரிப்ட்டில் மாற்றம் செய்து கொண்டிருக்கிறாராம். தன் படத்தில் கமலை விவசாயியாக காட்டுகிறாராம் வினோத்.

​கமல் படப்பிடிப்பு​கமல் ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் நிறைவடையும். அதன் பிறகு வினோத் படத்தின் ஷூட்டிங் துவங்குமாம். வினோத் இயக்கும் 6வது படம் கே.ஹெச். 233. அப்படி என்றால் இன்னும் 4 படங்கள் தான் இயக்குவாரா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

​Kamal Haasan: கமலுக்காக கெத்து வில்லனை தேர்வு செய்த ஹெச். வினோத்: ஆண்டவருக்கு ஏத்த ஆளு தான்

​லோகேஷ் முடிவு​கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று, அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரோ 10 படங்களுடன் ஓய்வு பெற்றுவிடப் போவதாக தெரிவித்துள்ளார். இப்படி திறமையான இளம் இயக்குநர்கள் எல்லாம் 10, 10 படங்களுடன் ஓய்வு பெறுவது சரியல்ல என்கிறார்கள் ரசிகர்கள்.
​லியோ படம்​Naa Ready: விஜய்யுடன் சேர்ந்து நா ரெடி பாடலை பாடிய பிக் பாஸ் பிரபலம்: யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்கலோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு விரைவில் நிறைவடையப் போகிறது. லியோவை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.