நியூயார்க்: அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று(ஜூன்-21) ஐ.நா., தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்று யோகா குறித்து சிறப்புரையாற்றானர். பிரதமர் மோடியின் உலகளாவிய சகோதரத்துவ செய்தி குறித்து பேசிய அமெரிக்க நடிகர் ரிச்சர்டு கெரே, ‘பிரதமர் மோடி இந்தியா கலாச்சாரத்தின் உதாரணம்’ என பாராட்டி பேசினார்.
சர்வதேச யோகா தினத்தில்(ஜூன்-21) ஐ.நா.,தலைமையகத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
“ஒட்டு மொத்த உலகிற்கு இந்திய அளித்த பரிசு யோகா, யோகா வாழ்க்கையின் நெறிமுறை, இந்தியாவின் யோகா பாரம்பரியமானது, சக்திவாய்ந்தது. இதற்கு ராயல்டி கிடையாது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது யோகா. அமைதியான தூய்மையான பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கவல்லது யோகா. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை தனதாக்க ஒன்றிணைவோம்” இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ரிச்சர்டு கெரே கூறியதாவது: ஐ.நா., தலையைகத்தில் நடைபெற்ற யோகா தினத்தில் பிரதமர் மோடியின் உரை மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவர் பாரம்பரியமான இந்திய கலாச்சாரத்தின் உதாரணமாக திகழ்கிறார் என பாராட்டி பேசினார்.
ஐ.நா.,வில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் 180 நாடுகள் பங்கேற்ற இந்நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement