புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து டேராடூனுக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டறிந்த விமானி, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, விமானம் மீண்டும் டில்லி வந்து பாதுகாப்பாக தரையிறங்கியது. பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் கிளம்பி செல்லும் என இண்டிகோ விமானம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement