Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்வளவு கருத்து போயிட்டாரே: எல்லாம் இதுக்காக தான்.!

ரஜினி மகள் ஐஸ்வர்யா நடிப்பில் ‘லால் சலாம்’ படம் உருவாகி வருகிறது. லைகா தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘லால் சலாம்’ பட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். அதன்பின்னர் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ‘முசாபிர்’ என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘லால் சலாம்’ படத்தை தற்போது இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மேலும் தனது மகள் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதனாலே இந்தப்படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. இதற்கான அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர செய்தது.

Adipurush: ‘ஆதிபுருஷ்’ படத்தை உடனே தடை பண்ணுங்க: பிரதமருக்கு பறந்த கடிதம்.!

‘லால் சலாம்’ படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் ஷுட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் டல்லாக, முகமெல்லாம் கருத்து போய் இருக்கிறார். இந்த பதிவிற்கு ‘ நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

‘லால் சலாம்’ படத்திற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரவு. பகல், மழை எதையும் பார்க்காமல் உழைத்து வருவது இந்த புகைப்படத்திலே தெரிகிறது. படத்தின் வெற்றிக்காக அவர் இந்தளவு உழைத்து வருவதை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தந்தையை இயக்குவேன் என கனவிலும் நினைக்கவில்லை என்று உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mar Selvaraj: கமல் முன்பாக ‘தேவர் மகன்’ படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ்.?: பரபரக்கும் இணையம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.