ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இறுதிக்கட்டத்தில் லியோகடந்த ஜனவரி மாதம் லியோ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை அடுத்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விஜய்யின் போர்ஷன் முடிவடையவுள்ள நிலையில் இம்மாதம் இறுதியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் விஜய்யை போன்ற ஒரு நட்சத்திரம் நடிக்கும் படத்தை அசால்டாக ஆறு மாதத்திற்குள் முடித்த லோகேஷ் கனகராஜை ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே பாராட்டி வருகின்றது
பர்த்டே ட்ரீட்விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் பர்த்டே ஸ்பெஷலாக லியோ படத்தில் இருந்து நா ரெடி என்ற பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலை விஜய்யே பாடியுள்ளது மேலும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 2000 நடனக்கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட இப்பாடல் விஜய்யின் பாடல்களிலேயே அதிகம் பேசப்படும் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்பாடலில் விஜய்யுடன் இணைந்து மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலி கான், அர்ஜுன் ஆகியோரும் நடனமாடியுள்ளனர் என தகவல்கள் வருகின்றன. எனவே மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலை போல இப்பாடலும் செம குத்து பாடலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
மீண்டும் கூட்டணிலியோ திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக லலித் தயாரித்து வருகின்றார். இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்தார். இதையடுத்து விஜய் மீண்டும் லலித்தின் தயாரிப்பில் லியோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். மாஸ்டர் படம் கொரோனா சூழல் காரணமாக திரையில் வெளியாகுமா இல்லை OTT யில் வெளியாகுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து வந்தது. ஆனால் என்ன ஆனாலும் விஜய்யின் மாஸ்டர் படத்தை திரையில் தான் வெளியிடுவேன் என அடம்பிடித்து பொறுத்திருந்து திரையில் வெளியிட்டார் லலித். அந்த கொரோனா சூழலிலும் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. எனவே லலித்தின் இந்த தன்னம்பிக்கை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போகவே அவருடன் மீண்டும் பணியாற்றி வருகின்றார்
கண்கலங்கிய லலித்இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லியோ படத்தை தயாரிப்பதை பற்றி பேசியுள்ளார் லலித். அவர் கூறியதாவது, பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாள் தளபதி என்னை அழைத்தார். அப்போது தளபதி என்னிடம் , நாம் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்றார். அவர் அப்படி சொன்னவுடன் நான் கண்கலங்கிவிட்டேன். விஜய்யே என் தயாரிப்பில் நடிக்கிறேன் என என்னை அழைத்து சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக படவேலைகளை விறுவிறுப்பாக துவங்கினேன் என்றார் லலித். இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது