சென்னை: Leo First Look (லியோ ஃபர்ஸ்ட் லுக்) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிவுட் ரசிகர்களிடம் மோஸ்ட் வாண்டட் திரைப்படமாக இப்போது இருப்பது லியோ படம்தான். மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யுடன் லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அவர் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் படம் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என பட அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
2000 டான்ஸர்கள்: காஷ்மீரில் தொடங்கிய லியோ ஷூட்டிங் அங்கு மொத்தம் 52 நாட்கள் நடைபெற்றது. அதனையடுத்து சென்னை திரும்பி பிரசாத் ஸ்டூடியோ, பையனூர், ஆதித்யராம் ஸ்டூடியோ உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்தது. சமீபத்தில் ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமீபத்தில்தான் 2000 டான்ஸர்களுடன் விஜய் நடனம் ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இன்னும் பத்து நாட்களில் ஷூட்டிங் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சிங்கிள்: இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவிருப்பதால் படத்திலிருந்து என்ன மாதிரியான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அன்றைய தினம் படத்திலிருந்து நா ரெடிதா என்ற சிங்கிள் பாடல் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதுதொடர்பான ப்ரோமோ வீடியோவும் நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
செம ட்ரீட்தான்: விஜய் பிறந்தநாளையொட்டி லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்னதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவரிடம் விஜய் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும்தான் வருமா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அன்றைய தினம் முழுக்க ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது என சஸ்பென்ஸ் வைத்தார். இதனையடுத்து என்னென்ன விஷயங்கள் லியோவிலிருந்து வெளியாகும் என தளபதி ரசிகர்கள் நகத்தை கடிக்க ஆரம்பித்தனர்.
ஃபர்ஸ்ட் லுக்: இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ் ஒன்றை லோகேஷ் கனகராஜ் இப்போது வெளியிட்டிருக்கிறார். அதன்படி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சரியாக 12 மணிக்கு லியோ ஃபர்ஸ்ட் லுக்கை பார்ப்பதற்கு இப்போதே அலாரம் வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
லியோ ரிலீஸ்: லியோ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.