ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
பர்த்டே ட்ரீட்விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு எந்த மாதிரியான அப்டேட்டை வெளியிடும் என ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களு எதிர்பார்த்து இருந்தனர். கிலிம்ப்ஸ் வீடியோவா அல்லது டீசரா என பல கணிப்புகள் போய்க்கொண்டிருக்க தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று ஒரு கலக்கலான ஒரு ப்ரோமோவுடன் வெளியானது.நா ரெடி என்ற அப்பாடலை விஜய்யே பாடியுள்ளது கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது
வெளியான ப்ரோமோலியோ படத்தின் அப்டேட் ஒரு ப்ரோமோவுடன் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில் படக்குழு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மாலை நா ரெடி என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதாக ஒரு ப்ரோமோவுடன் படக்குழு வெளியிட்டது.
மேலும் இப்பாடலை பாடியது உங்கள் விஜய் என்ற tagline உடன் இந்த ப்ரோமோ வெளியானது. மேலும் இப்பாடல் தர லோக்கலாக இருக்கும் என்றும், விஜய்யின் நடனம் அசத்தலாக இருக்கும் என்றும் பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்த ப்ரோமோவை ரசிகர்கள் டீகோட் செய்து பல விஷயங்களை ஆராய்ந்து வருகின்றனர்
LCU பஞ்சாயத்துலியோ திரைப்படம் துவங்கும் முன்பே , இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே அனைவரும் லியோ LCU வீல் உருவாகின்றதா இல்லையா என்ற கேள்வியை தான் கேட்டு வருகின்றனர். லியோ படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர்களிடமும் இந்த கேள்வி தான் கேட்கப்பட்டு வருகின்றது. அவர்களும் சாமார்த்தியமாக இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவி வருகின்றனர். சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பங்கேற்றபோது அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ், படம் வந்த பின்னர் இந்த கேள்விக்கு பதில் தெரியும் என கூறிவிட்டார். இந்நிலையில் தற்போது நா ரெடி பாடலை வைத்து ரசிகர்கள் இப்படம் LCU வா ? இல்லையா ? என கணித்து வருகின்றனர்
நா ரெடி டீகோட்நா ரெடி பாடலின் வரிகள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. நா ரெடி தான் வரவா என துவங்கும் அப்பாடலில் தேழ் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா என ஒரு வரி இடம்பெற்றிருந்தது. இதை வைத்து ரசிகர்கள், கண்டிப்பாக லியோ LCU வில் தான் உருவாகின்றது என கணித்து வருகின்றனர். அதாவது விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரங்கள் தேழ் படத்தை பச்சைக்குத்தி இருப்பார்கள், அது அவர்களின் சின்னமாக காட்டப்பட்டது. இதையடுத்து லியோ படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் லியோ. எனவே தான் தேழ் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா என வரிகள் அமைக்கப்பட்டதாக ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இதன் மூலம் லோகேஷ் மறைமுகமாக லியோ LCU தான் இணைந்துள்ளது என சொல்லாமல் சொல்கின்றார் எனவும் பேசி வருகின்றனர் ரசிகர்கள்.