ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Thalapathy Vijay: லியோ படத்தில் இருக்கும் நா ரெடி பாடலை உங்கள் விஜய்யுடன் சேர்ந்து பாடியிருக்கிறார் பிக் பாஸ் பிரபலம் ஒருவர். அவரை யாரும் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை.
நா ரெடிலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லியோ. விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக நா ரெடி பாடலை ஜூன் 22ம் தேதி வெளியிடுகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட நா ரெட் ப்ரொமோ வீடியோவை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு ஒரே ஆச்சரியம் தான்.
Sanjay Dutt: ஆத்தி, 308 பெண்களுடன் உறவு கொண்டாரா லியோ வில்லன் சஞ்சய் தத்: வியக்கும் ரசிகர்கள்விஜய்”பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!ராப்பர் அசல் கோலார்நா ரெடி என்கிற பாடலை அனிருத் இசையில் பாடியிருப்பது உங்கள் விஜய். அந்த பாடலில் வரும் ராப் பகுதியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அசல் கோலார் பாடியிருக்கிறார். முதலில் அவருக்கு கிரெடிட் கொடுத்திருந்தார்கள். பின்னர் அவர் பெயரை நீக்கிவிட்டார்கள். ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கக்கூட அப்படி செய்திருக்கலாம். இந்நிலையில் நா ரெடி புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் போட்டு ணோவ் நீ வாணா என தெரிவித்துள்ளார் அசல் கோலார்.
முதல் முறையாகநா ரெடி பாடல் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் சேர்ந்து பாடியிருக்கிறார் அசல் கோலார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இந்த அசல் கோலாரை மறந்தே போய்விட்டோம்யா. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கொஞ்ச நஞ்ச அட்டூழியமா செய்தார். தடவல் மன்னனாச்சே என பிக் பாஸ் பார்வையாளர்கள் பழசை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Tamannaah: படுக்கையறை காட்சிகளில் நடித்தது ஏன்?: தமன்னாவின் விளக்கத்தால் ரசிகர்கள் கோபம்
அனிருத்தும் பாடியிருக்கிறார்நா ரெடி பாடலுக்கு இசையமைத்ததுடன் மட்டுமில்லாமல் தனக்கு பிடித்த தளபதி விஜய்யுடன் சேர்ந்து பாடவும் செய்திருக்கிறார் அனிருத். விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் குரல் கொடுத்திருக்கும் நா ரெடி பாடலுக்கு தளபதியுடன் சேர்ந்து 2 ஆயிரம் பேர் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். இது ஷங்கர் படத்தை விட பிரமாண்டமாக இருக்கே என அனைவரும் வியந்து கொண்டிருக்கிறார்கள்.Vijay: அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்க பில்போர்டில் கெத்து காட்டும் விஜய்: தளபதினா சும்மாவா
விஜய் வேண்டுகோள்நா ரெடி பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தான் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த பாடலை 8 நாட்களில் ஷூட் செய்ய திட்டமிட்டார்களாம். இந்நிலையில் தினேஷ் மாஸ்டரை அணுகி 7 நாட்களில் முடிக்கப் பாருங்கள். அது தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கும். நான் பிரேக்கே இல்லாமல் ஆடுகிறேன் என்று கூறியிருக்கிறார் விஜய்.
ரூ. 1 கோடி மிச்சம்விஜய் பேச்சுக்கு மறுபேச்சு ஏது என்று தினேஷ் மாஸ்டரும் நா ரெடி பாடலை 7 நாட்களில் ஷூட் செய்து முடித்துவிட்டார். இதனால் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு ரூ. 1 கோடி மிச்சம் ஆகியிருக்கிறதாம். இந்த தகவலை சொன்னதே லலித் குமார் தான். அவர் லியோ பற்றியும், விஜய் பற்றியும் அளித்து வரும் பேட்டிகள் தளபதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. லியோ பட வாய்ப்பை விஜய் தனக்கு கொடுத்ததை நினைத்து சந்தோஷத்தில் லலித் குமாருக்கு கண்ணீரே வந்துவிட்டதாம்.